GuidePedia

0
மக்களுக்கு சுற்றாடல் தொடர்பான விழிப்புணர்வுகளை எற்படுத்தவதுடன் சுற்றுப் புறச்சூழலை சுத்தமாக வைத்திருப்பதனூடாக சூழலை பாதுகாத்தல் கால நிலையில் சிறந்த மாற்றித்தினைக் கொண்டு வரும் நோக்கத்தின் அடிப்படையில் 

SWOAD அமைப்பினால் EU-UNDP இன் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழல் பாதுகாப்பு செயற்பாட்டு நடவடிக்கைகளின் கீழ் பொலித்தீன் பாவனையினைக் குறைக்கும் நோக்கில் கதிர்காம யாத்திரிகர்களுக்கு துணியினால் தைக்கப்பட்ட பைகளும், உகந்தை முருகன் ஆலைய சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருப்பதனை நோக்காகக்கொண்டு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள், பதாதைகள், மற்றும் கழிவுகள், குப்பைகள் சேகரிப்பதற்கான தொட்டிகளும்; வழங்கிவைக்கும் நிகழ்வு உகந்தை முருகன் ஆலயவளாகத்தில் இடம்பெற்றது


.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.கே.விமலநாதன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் டாக்டர் அனுசியா சேனாதிராஜா,RDB வங்கி முகாமையாளர் திரு.கே.சந்தியநாதன், உகந்தைமலை முருகன் ஆலய வண்ணக்கர் திரு.திஸாநாயக்க சுதுநிலம, UNDP அம்பாறை மாவட்ட களநிலைப் பொறுப்பாளர் திரு.பி.மனோஜ், மற்றும் சுவாட் அமைப்பின் தலைவர் வ.பரமசிங்கம், நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் திரு.கே.பிறேமலதன், திட்ட திரு.சுகேந்திரராஜா, இணைப்பாளர்கள், உத்தியோகத்தர்கள்; மற்றும் YLD பயிலுனர்களின் பங்குபற்றல்களுடன் மேற்படி நிகழ்வு சிறப்புற இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உகந்தை முருகன் ஆலய திருவிழாவில் கலந்து கொள்ளும் மக்களும் கதிர்காம பாத யாத்திரிகர்களும் கலந்துகொண்டு பயனடைநதனர்















Post a Comment

 
Top